அர்ஜுனன் சிவ பெருமான் பாசுபதம்
படம் : கிராதார்ஜுநீயம் காட்சி சிற்பம் . காஞ்சி ஸ்ரீ கைலாசநாதர் கிராதார்ஜுநீயம் -12ம் திருமுறை 37 கழறிற்றறிவார் நாயனார் புராணம் பாடல் எண் : 108 திருச்சிற்றம்பலம் நெல்வேலி நீற்றழகர் தமைப்பணிந்து பாடிநிகழ் பல்வேறு பதிபிறவும் பணிந்தன்பால் வந்தணைந்தார் வில்வேட ராய்வென்றி விசயன்எதிர் பன்றிப்பின் செல்வேத முதல்வரமர் திருவிரா மேச்சரத்து திருச்சிற்றம்பலம் "வில்வேட ராய்வென்றி விசயன்எதிர் பன்றிப்பின் செல்வேத முதல்வரமர் " – இந்த வரிகளுக்கு “ சிவக்கவிமணி ” C K சுப்பிரமணிய முதலியார் அவர்களின் பெரிய புராண உரைக்குறிப்பு – பார்க்க அவரது உரை – ஏழாம் பகுதி - கழறிற்றறிவார் நாயனார் புராணம் // பாசுபதம் பெறும் பொருட்டுத் தவஞ் செய்திருந்த அருச்சுனனைக் கொல்லத் துரியோதன னேவலால் வந்து பன்றி வடிவுடன் மறைந்து காத்திருந்த “முகன்’” என்னும் அசுரனைச் சிவபெருமான் , வேடவுருவங் கொண்டு நந்தி கணத்தவர்களாகிய பரிசனங்களும் நாய்கள் உருவு பூண்ட வேதங்கள் சூழ எழுந்ததருளி வந்து எய்த சரிதம் மாபாரதத்துக் கேட்கப்படும் . இச்சரிதம் திருமுறைத் திருவாக்குகளிற் பல இடங்களிலும் போற்றப்படுவது / வைகாச