அர்ஜுனன் சிவ பெருமான் பாசுபதம்


படம் : கிராதார்ஜுநீயம் காட்சி  சிற்பம் . காஞ்சி ஸ்ரீ கைலாசநாதர்
கிராதார்ஜுநீயம் -12ம்  திருமுறை
37 கழறிற்றறிவார் நாயனார் புராணம்
பாடல் எண் : 108
திருச்சிற்றம்பலம் 
நெல்வேலி நீற்றழகர்
    தமைப்பணிந்து பாடிநிகழ்
பல்வேறு பதிபிறவும்
    பணிந்தன்பால் வந்தணைந்தார்
வில்வேட ராய்வென்றி
    விசயன்எதிர் பன்றிப்பின்
செல்வேத முதல்வரமர்
    திருவிரா மேச்சரத்து
திருச்சிற்றம்பலம்
"வில்வேட ராய்வென்றி     விசயன்எதிர் பன்றிப்பின் செல்வேத முதல்வரமர் " 
 – இந்த வரிகளுக்கு “ சிவக்கவிமணி ”  C K சுப்பிரமணிய முதலியார் அவர்களின் பெரிய புராண உரைக்குறிப்பு – பார்க்க அவரது  உரை – ஏழாம் பகுதி - கழறிற்றறிவார் நாயனார் புராணம்
//  பாசுபதம் பெறும் பொருட்டுத் தவஞ் செய்திருந்த அருச்சுனனைக் கொல்லத் துரியோதன னேவலால் வந்து பன்றி வடிவுடன் மறைந்து காத்திருந்த “முகன்’” என்னும் அசுரனைச் சிவபெருமான் , வேடவுருவங் கொண்டு நந்தி கணத்தவர்களாகிய பரிசனங்களும்  நாய்கள் உருவு பூண்ட வேதங்கள் சூழ எழுந்ததருளி வந்து எய்த  சரிதம் மாபாரதத்துக்  கேட்கப்படும் . இச்சரிதம் திருமுறைத்  திருவாக்குகளிற் பல இடங்களிலும் போற்றப்படுவது  /


















வைகாசி விசாகத்தில் அஸ்திரம் பெற்ற அர்ஜுனன்

 அர்ஜுனன் தவம் இறைவர் திருப்பெயர் : பாசுபதேஸ்வரரர், பாசுபதநாதர்

இறைவியார் திருப்பெயர் : சற்குணாம்பாள், நல்லநாயகி
தல மரம் : மூங்கில்

தீர்த்தம் : கிருபா தீர்த்தம், தீர்த்தக் குளம். (ஆலயத்தின் எதிரில் உள்ளது.)

வழிபட்டோர் : நாரதர், அர்ச்சுனன் முதலியோர்

புராணப் பெயர் : திருவேட்களம்

பாடியவர்கள் :  திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர்

தேவாரப்பபாடல் பெற்ற சிவத்தலங்களில் முதலானது சிதம்பரம். இரண்டாவது திருவேட்களம். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

சிதம்பரத்தை அடுத்துள்ள திருவேட்களம். இரண்டாயிரம் ஆண்டு பழமையான இங்கு தான் அர்ஜுனனுக்கு இறைவன் பாசுபதம் வழங்கினார். அம்மன் நல்லநாயகி நான்கு திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறாள். முன் இரண்டு கைகளில் ஒரு கையில் தாமரையும், ஒரு கையில் நீலோத்பவ மலருடனும் அருளுகிறாள். இவளுக்கு எதிரிலும் நந்தி உள்ளது.

தொழுபவர்க்கு அல்லல் இல்லை என்கிறார் திருநாவுக்கரசர்.

ஒரு முறை சம்பந்தர் சிதம்பரம் நடராஜரை தரிசிக்க வருகிறார். அப்போது அவர் திருவேட்களத்தில் தங்கி சிதம்பரம் நடராஜரை தரிசித்துள்ளார். 

திருவேட்களம் பற்றி சம்பந்தர் பாடும் போது,"வேட்கள நன்னகர்' என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன்,"சிறப்புடன் வாழ வாழ்வில் ஒரு முறையாவது "திருவேட்களம் போ", என்றும், அம்பிகையை "பெண்ணில் நல்லாள்' என்றும் குறிப்பிடுகிறார். அருணகிரிநாதர் இத்தல முருகனை திருப்புகழில் பாடியுள்ளார்.

பாரதப் போரில் வெற்றி பெறுவதற்காக அர்ஜுனன் பாசுபதம் பெற விரும்புகிறான். அப்போது கிருஷ்ணன், நீ அனைத்து அஸ்திரங்களையும் உனது மானசீக தந்தையான இந்திரனிடமிருந்து பெற்றாய். ஆனால் பாசுபதாஸ்திரத்தை மட்டும் நீ சிவனிடமிருந்து தான் பெற வேண்டும். அதற்கு இந்திரனின் அனுமதி பெற வேண்டும் என்றார். 

இதற்காக அர்ஜுனன் மூங்கில் காடாக இருந்த இத்தலத்தில் தவம் செய்தான். அர்ஜுனனின் தவத்தை கலைக்க துரியோதனன் மூகாசுரனை பன்றி வடிவில் அனுப்பினான். உடனே சிவன் பார்வதியுடன் வேடன் உருவில் வந்து பன்றியை கொன்றார். 

நான்கு வேதங்களும் நாய்களாக மாறி இறைவன் பின்னே வந்தன. அதே பன்றியின் மீது அர்ஜுனனும் அம்பு எய்தான். பன்றியை யார் கொன்றார்கள் என்பது குறித்து சிவனுக்கும், அர்ஜுனனுக்கும் சொற்போரும் விற்போரும் நடந்தது. போரில் அர்ஜுனனின் வில் முறிந்தது.

கோபமடைந்த அர்ஜுனன் முறிந்த வில்லால் வேடனை அடித்தான். அந்த அடி மூவுலகில் உள்ள அனைத்து உயிர்களின் மீதும் விழுந்தது. வேடுவப்பெண்ணாக வந்த பார்வதி கோபமடைந்தாள். சிவன் பார்வதியிடம் உமையவளே! நீ லோகமாதா! நீ கோபப்பட்டால் இவ்வுலகம் தாங்காது, என சமாதானப்படுத்தி "சற்குணா' (நல்லநாயகி) தள்ளி நில் என்கிறார்.  

சிவன் தன் திருவடியால் அர்ஜுனனை தூக்கி எறிகிறார். சிவனின் பாத தீட்சை பெற்று அன்னையின் கருணையால் இத்தல கிருபாகடாட்ச தீர்த்தத்தில் விழுகிறான். சிவன் பார்வதியுடன் காட்சி கொடுத்து பாசுபதாஸ்திரத்தை தந்தருளினார். அர்ஜுனன் வில்லால் அடித்த தடத்தை இன்றும் லிங்கத்தின் மீது காணலாம்.

அம்பிகையின் சன்னதியில் 4 தூண்களிலும் அர்ஜுனன் தன் ஆயுதங்களை வைத்தல், ஒரு காலில் நின்று தவம் புரிதல், இறைவன் வேடன் வடிவம் எடுத்தல், சிவனும் அர்ஜுனனும் சண்டையிடுதல் போன்ற சிற்பங்கள் சிறப்பானவை!

கோவில் அமைவிடம் :
சிதம்பரத்திலிருந்து அண்ணாமலை நகர் செல்லும் சாலையில் உள்ளது. (அண்ணாமலை பல்கலைகழகப் பகுதியைத் கடந்து சென்றால் எளிது)

#பாசுபதம்_வாங்கியது_ஏன்??...

🔱பாசுபதத்தை ஏவினால் அர்ஜூனனுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் தான் அதனை அவர் உபயோகிக்கவில்லை என்ற சில மூடர்கள் உளறி வருகின்றனர்.

அது முற்றிலும் தவறு! !!!

💪முதலில் அர்ஜுனன் போரில் வெற்றி பெற தேவையான அனைத்து அஸ்திரங்களையும் குரு துரோணர் மூலம் கற்று வெற்றியையும் அடைந்துள்ளார்.
💪அவர் தெய்வீக அஸ்திரம் வேண்டியது அசுரர்களையும் வரம் பெற்று அதர்மம் புரியும் அதர்மிகளையும் அழிப்பதற்காகவே! !!

💪சாதரண வில்லினால் பல வெற்றிகளையும் அடைந்தவர் அர்ஜுனன்.
💪இவரது வெற்றிகளை தொடர்ந்து இந்த பக்கத்தில் காணலாம்! !

சரி விஷயத்திற்கு வருவோம்!!

#அர்ஜுனன்_தவம்...
🌺வியாசரின் அறிவுரைப்படி யுதிஷ்டிரர் கட்டளைகிணங்க அர்ஜுனன் தவம் செல்ல இவையே காரணம்👇👇👇(வியாசர் உரைத்தது)....
💜தவத்தின் காரணமாகவும் வீரத்தின் காரணமாகவும் தேவர்களைக் காணும் #தகுதியைப் பெற்றவனாவான்.
💜அர்ஜுனன், அழிவறியாத, எப்போதும் வெற்றிபெறும், ஒப்பற்ற, நித்திய தெய்வமான பழங்காலத்து #நாராயணனுக்கு_நண்பனும்,
💜பெரும் சக்தி படைத்த #முனிவனுமாவான்.

💜பெரும் பலம்வாய்ந்த கரங்கள் கொண்ட அர்ஜுனன், இந்திரனிடமும், #ருத்திரனிடமும், லோகபாலர்களிடமும் இருந்து ஆயுதங்களைப் பெற்ற பிறகு பெரும் சாதனைகளைச் சாதிப்பான்!!

#அர்ஜுனன்_வேண்டுவது...
🔱அர்ஜுனன் முக்கண்ணன் சிவபெருமானிடம் #பிரம்மசிரத்தையே வேண்டினார்.பாசுபதம் அல்ல.
🔱"ஓ காளையைக் குறியீடாகக் கொண்டிருக்கும் சிறப்புமிக்க தெய்வமே, நீ நான் விரும்புவதை அருள்வதாக இருந்தால், ஓ தலைவா, உன்னால் தாங்கப்படும் தெய்வீகமான ஆயுதமான பிரம்மசிர ஆயுதத்தைப் பெற விரும்புகிறேன்.

#யாருக்காக_இந்த_ஆயுதம்....
🏹அர்ஜுனன் பிரம்மசிர அஸ்திரத்தை வேண்டுவது யாரை அழிப்பதற்காக என்பதை,
🏹யுக முடிவில் மொத்த #அண்டத்தையே அழிக்கும் சக்தி கொண்ட அந்த ஆயுதத்தின் துணை கொண்டு,

🏹 ஓ தேவர்களுக்குத் தேவா {சிவனே}, நான் ஒரு புறமும், #கர்ணன்#பீஷ்மர், கிருபர் மற்றும் துரோணர் ஆகியோர் மறு புறமும் நின்று கடும்போரிடும்போது உமது கருணையால் நான் வெற்றியை அடைவேன்.

#தானவர்களையும்_அழிக்கவும்_மேலும்
🔥தானவர்கள், ராட்சசர்கள், தீய ஆவிகள், பிசாசுகள், கந்தர்வர்கள், நாகர்கள் என அனைவரையும் உட்கொள்ளும் அந்த ஆயுதத்தை ஏவும் போது ,
🔥அதில் இருந்து ஆயிரக்கணக்கான கடும் கதாயுதங்களும், கடும் விஷம் கொண்ட பாம்புகள் போன்ற கணைகளையும் உற்பத்தி செய்யும்.
மேலும் அதன் தாக்கம் அறிய...👇👇👇👇
https://m.facebook.com/story.php?story_fbid=1065097170570268&id=341734346239891

🏹அந்த ஆயுதத்தைக் கொண்டு நான் பீஷ்மர், துரோணர், கிருபர், எப்போதும் #இழிவாகவே_பேசும்_கர்ணன் ஆகியோருடன் நான் போரிடுவேன்.
🏹ஓ பகனின் கண்களை அழித்த சிறப்புமிக்கவனே, அவர்களுடன் சண்டையிட்டு #வெற்றி பெறுவதே எனது முதன்மையான விருப்பமாகும்" என்கிறார் அர்ஜுனன்...

#ஆனால்_சிவன்_கொடுத்தது....
😘பிரம்மசிரஸ் வேண்டிய பார்த்தனுக்கு சிவ பெருமான் தாமாகவே விரும்பி வழங்கியது #பாசுபதம்...
😘ஓ அர்ஜுனனே, எனக்குப் #பிடித்த எனது ஆயுதமான பாசுபதத்தை {பாசுபதாயுதத்தை} நான் உனக்குத் தருகிறேன்.
😘நீ அதைத் #தாங்கவும்_விடுக்கவும்_திரும்பப்பெறவும் தகுதி வாய்ந்தவன்.

😘இந்திரனோ, யமனோ, யக்ஷர்களின் மன்னனோ, வருணனோ அல்லது வாயுவோ இந்த ஆயுதம் குறித்து #அறியமாட்டார்கள். அப்படி இருக்கும்போது #மனிதர்கள் இது குறித்து எவ்வாறு அறிவார்கள்?

#சிவபெருமான்_Condition:
👉 #பலம் குறைந்த எதிரியின் மேல் இதை விடுத்தால் இந்த முழு அண்டமும் அழிந்துவிடும்.
👉ஆகையால், சரியான #காரணம் இல்லாமல் இந்த ஆயுதத்தை விடுக்கக்கூடாது.

👉 இந்த மூன்று உலகிலும் உள்ள அசைவன மற்றும் அசையாதன ஆகியவற்றில், இந்த ஆயுதத்தால் #அழிக்க முடியாதவர் யாரும் இல்லை.
😍இந்த ஆயுதத்தை மனதாலும், கண்ணாலும், வார்த்தைகளாலும், வில்லாலும் தொடுக்கலாம்..

#அர்ஜுனன்_கனவில்_பாசுபதம்...
🐚அர்ஜுனன் ஜெயத்ரதனை வதைப்பதை பற்றி சிந்தித்து கொண்டிருக்கும் போது பகவான் கிருஷ்ணர் பாசுபதம் பெற வழி கூறினார்...

💙“ஓ! பார்த்தா {அர்ஜுனா}, பாசுபதம் என்ற பெயரில் அழிக்கப்பட முடியாத ஓர் உயர்ந்த ஆயுதம் இருக்கிறது.
💙அதைக் கொண்டு தேவன் மகேஸ்வரன் {சிவன்}, தைத்தியர்கள் அனைவரையும் போரில் கொன்றான்.
💙அதை இப்போது நீ நினைவு கூர்ந்தால், நாளை #ஜெயத்ரதனை உன்னால் கொல்ல முடியும்.

💙அதை நீ (இப்போது) அறியவில்லையெனில், உன் இதயத்திற்குள், காளையைத் தன் அடையாளமாகக் {காளைக் கொடி} கொண்ட தேவனை {சிவனைத்} துதிப்பாயாக.

#Finally ....
1.அர்ஜுனன் தவம் இருந்ததே கௌரவ சேனையில் உள்ள பலம் மிக்க வீரர்களை அழிப்பதற்கே!!

2.கேட்டது பிரம்மசிரம் கிடைத்தது!! பாசுபதம்(தகுதியால்)
3.ஆயுதம் கேட்டது பீஷ்மர்,துரோணர்,கிருபர்,கர்ணனை அழிப்பதற்கே!!
4.Condition பலம் குன்றியவர்கள் மேல் ஏவ கூடாது!!

5.பாசுபதம் பயன்படுத்திய ஒரே இடம் ஹிரண்யபுர யுத்தம் .அதில் கூட அர்ஜுனனுக்கு ஆபத்து இல்லை!! (சரியான காரணத்திற்காக பயன்படுத்தியுள்ளார்)
ஹிரண்யபுரம் யுத்தம் காண 👇👇👇👇

https://m.facebook.com/story.php?story_fbid=1052779865135332&id=341734346239891

7.ஜெயத்ரதன் மீது பாசுபதம் ஏவினால் கூட அர்ஜுனனுக்கு வெற்றி தான்! !!

Main points...
8.பலம் குன்றியவர்கள் என்றால் யார் பீஷ்மரா? துரோணரா? கிருபரா? இல்லை கர்ணனா??

😳இவர்கள் மீது ஏவினால் அது அர்ஜுனனுக்கு ஆபத்தா என்ன??

😳அப்போது கர்ணன் போன்ற இவர்கள் வீரமற்றவர்களா??

ஆயுதம் கேட்டதே இவர்களுக்கு இதில் இவர்கள் மீது ஏவினால் அர்ஜுனனுக்கு எப்படிங்கடா ஆபத்து வரும் மூடர்களே!!!!
அர்ஜுனன் அவரே அவர் உயிரை எடுக்க ஆயுதம் வாங்கிட்டு வந்த மாதிரி பேசுதுங்க

தெய்வீக ஆயுதத்தை பயன்படுத்தாமல் இருப்பது அர்ஜுனன் கொள்கை அதை தவறாக சித்தரிப்பதே எதிரிகள் கொள்கை


Comments

Popular posts from this blog

0001. அகர முதல எழுத்தெல்லாம்